உலக அளவில், தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் 'தர்பார்'. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம், ரஜினி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற போதும், பலர் எதிர் பார்த்த அளவிற்கு படம் இல்லை என தொடர்ந்து தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், தற்போது தர்பாரின் முதல் நாள் வசூல் விவரங்கள் வெளியாகி அனைவரையும் அதிரவைத்துள்ளது. சென்னையை பொறுத்தவரை... 2 கோடி அளவில் மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், உலகின் மற்ற இடங்களில் வெளியான 'தர்பார்'... வசூலில் செம்ம மாஸ் காட்டியுள்ளது என்று தான் கூற வேண்டும்.

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி... 

அமெரிக்கா - ரூ. 4. 27 கோடி 

ஆஸ்திரேலியா -  ரூ. 78 லட்சம் 

நியூசிலாந்து - ரூ. 7 லட்சத்து 77 ஆயிரம் 

வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில்... அடுத்தடுத்த நாட்களுக்கான அணைத்து டிக்கெட்டுகளையும் ரசிகர்கள் புக்  செய்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே தற்போது... தர்பார் வெளிநாட்டில் தன்னுடைய வசூல் வேட்டையை நிரூபித்துள்ளது.

அதே போல்... நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை நாள் என்பதாலும், பொங்கல் விடுமுறை வருவதாலும்,  தமிழகத்தின் அணைத்து பகுதிகளிலும் படத்தின் வசூல் நிறைவாகவே இருக்கும் என, நம்பிக்கை தெரிவிக்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள். 

நேற்று ஒரே நாளில் மட்டும் 'தர்பார்' படம் ரூபாய் 34.5 கோடி வசூல் செய்து உள்ளது. அதேபோல தெலுங்கு, ஹிந்தி என மொத்தமாக கணக்கிட்டால் சுமார் 120 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் முதல் நாளிலேயே தலைவர் படத்திற்கு மாஸ் வசூல் கிடைத்துள்ளது என கொண்டாடி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.