Dancing on wedding rings for two rupees - famous actor elastic ...
சிறு வயதில் இரண்டு ரூபாய்க்காக திருமண நிகழ்ச்சிகளில் நடனம் ஆடினேன் என்று பிரபல நடிகர் நவாஸுதீன் சீத்திக் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நடிகர் நவாஸுதீன் சித்திக் ஒரு பாலிவுட் நடிகர். இவர் இயக்குனர் சொல்லிக் கொடுத்த வேடத்தை அப்படியே நடித்துக் கொடுப்பவர்.
இவர் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்தார்.
அதில், ‘‘சிறுவனாக நான் இருந்தபோது நான் என் நண்பர்களுடன் சேர்ந்து திருமண நிகழ்ச்சிகளில் நடனம் ஆடியுள்ளேன். எங்கள் பகுதியில் நடக்கும் திருமணங்களுக்கு போய் நடனம் ஆடினால் இரண்டு அல்லது மூன்று ரூபாய் தருவார்கள். அது அப்போது எனக்கு பெரிய தொகை.
“முன்னா மைக்கேல்” படத்தின் இயக்குனர், எனக்கு நடனம் வராது என்று கூறியும் படத்தில் என்னை நடனம் ஆட வைத்தார்” என்று அவர் தனது அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
