Dance master who turned from 200 to 85 kg

பாலிவுட்டின் புகழ்பெற்ற டான்ஸ் மாஸ்டரான கணேஷ் ஆச்சார்யா தன்னுடைய உடல் எடையை 200 கிலோவில் இருந்து 85 கிலோவாக குறைத்து செம்ம ஃபிட்டாகி உள்ளார்.

பிரபுதேவா நடித்த ஏபிசிடி படத்தில் பிரபுதேவாவின் நண்பராக இருப்பாரே ஒரு குண்டு மனிதர். அவர் பாலிவுட்டில் பெரிய டான்ஸ் மாஸ்டர். அவர்தான் கணேஷ் ஆச்சார்யா.

இவர் தன்னுடைய 200 கிலோ உடல் எடையால் மிகவும் அவதிப்பட்டு வந்த நிலையில், அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக ஜிம்மே கதி என்று கடும் முயற்சியினால் தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியது: “ஆச்சார்யா என்றால் முதலில் ஞாபகத்திற்கு வருவது என்னுடைய உடல் தான். அதனை மாற்றத்தான் என்னுடைய உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்பினேன்.

இதன் காரணமாக நான் ஒன்றரை வருடமாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தேன். மேலும், டான்ஸ் மீது எனக்கு ஆர்வம் அதிகம். பல படங்களில் டான்ஸ் மாஸ்டராக நடித்திருக்கிறேன். ஆனால், என் உடல் எடை 200 கிலோவாக இருந்தாலும் டான்ஸை விட்டதில்லை. தற்போது என்னுடைய டான்ஸ் எனர்ஜி கூடியிருப்பதாக உணர்கிறேன்” என்று தெரிவித்தார்.