பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம், நடிகை ரேஷ்மா வெளியேற்றப்பட்டது, ரசிகர்களுக்கு மட்டும் இன்றி போட்டியாளர்களுக்கும் மிக பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் திடீர் என நடிகர் சரவணன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்த விஷயத்தை அனைத்து போட்டியாளர்களையும் லிவிங் ஏரியாவிற்கு அழைத்து, "ஒரு சில காரணங்களுக்காக சரவணன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் என்கிற தகவலை தெரிவிக்கிறார்" பிக்பாஸ். 

இது பற்றி தெரிந்ததும், அனைத்து போட்டியாளர்களும் அதிர்ச்சியடைகின்றனர். குறிப்பாக, மதுமிதா, கவின், சாண்டி ஆகியோர் தேம்பி தேம்பி அழுகின்றனர். மேலும் என்ன காரணம் பிக்பாஸ் என அணைத்து போட்டியாளர்களும் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த காட்சி தற்போது வெளியாகியுள்ள முதல் ப்ரோமோ மூலம் தெரிகிறது.

இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில், மது உண்மையில் அழுவது போல் தெரியவில்லை என, கூறியுள்ளார் பிரபல நடன இயக்குனர் சதீஷ். ஏற்கனவே இன்றைய ப்ரோமோவில், பிக்பாஸ் அறிவிப்பதற்கு முன்பே கவினும் சாண்டியும் தலையில் கையை வைத்து அழ ஆரமித்து விட்டதாக நெட்டிசன்கள் சிலர் கருத்து கூறி வந்த நிலையில், பிரபலம் ஒருவரும், இப்படி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.