பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முழுக்க கவின் லாஸ்லியாவின் காதல் காட்சிகள் அதிக அளவில் காட்டப்பட்டது. இது, சில ரசிகர்களுக்கு சற்று கடுப்பை ஏற்றியது என்றே கூறலாம். நெட்டிசன்கள் சிலர் இது குறித்து நேரடியாகவே சமூக வலைத்தளங்களில் விமர்சித்து பேசி இருந்தனர்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் டாஸ்குகள், சூடு பிடிக்கத் துவங்கியுள்ளன. அதன்படி இன்று வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில் பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்குகளை, ஹோம்மேட்ஸ் செய்யும் காட்சி வெளியாகியுள்ளது.

இதற்கு சேரன் நடுவராக இருக்கிறார். முதலில் கவின் மற்றும் முகேன் ஒரு தட்டில் உள்ள மாவை, ஊதி கீழே தள்ளி உள்ளே வைக்கப்பட்டுள்ள ஒரு பொருளை வாயால் எடுத்து, பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் பௌலில் போட வேண்டும்.

இதைத்தொடர்ந்து காட்டப்படும் காட்சிகளில் சாண்டி மற்றும் தர்ஷன் இருவருக்கும், லட்டு சாப்பிடும் போட்டி வைக்கப்படுகின்றது. இதில், இருவருமே சமமான அளவு லட்டுகளை உண்ணுகின்றனர். மீதம் இருவருடைய தட்டிலும் 25 லட்டுகள் உள்ளதாக நடுவர் சேரன் கூறுகிறார். இதனால் மீண்டும் லட்டுகளை சாப்பிட வேண்டுமென சேரன் கூறுவதால் இனி சாப்பிட்டால் வாந்தி தான் வரும் என பிக்பாஸ் இடம் தெரிவிக்கிறார் சாண்டி. 

இந்த போட்டிகள் இன்றைய தினம், கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.