நடன இயக்குனர் கலா மாஸ்டர் பற்றி  சினிமா துறையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். வெள்ளித்திரை மற்றும் இன்றி சின்னத்திரை நிகழ்ச்சிகிகளிலும் நடுவராக இருந்தவர். மேலும் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர், மற்றும் ஜோதிகா, ஹன்ஷிகா, திரிஷா, குஷ்பு போன்ற பல நடிகைகளுக்கு நடன இயக்குனராக இருந்தவர்.  

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவருடைய திரையுலக அனுபவம், சந்தித்த மனிதர்கள், மறக்க முடியாத நிகழ்வுகள் என பலவற்றை பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார்.

திடீர் என அவர் வணங்கும் விநாயகர் பற்றியும் பேசினார் அப்போது பொதுவாக பலர் கோவிலுக்கு போனால் அமைதி, சந்தோசம், நன்மை கிடைக்கும் ஆனால் எனக்கு கடவுளே கிடைத்திருக்கிறார் என கூறினார்.

அது குறித்து விரிவாக பேச ஆரபித்த கலா நான்  12 வருடங்களுக்கு முன் நவராத்திரி பண்டிகை நேரத்தில் சென்னையில் உள்ள  காளிகாம்பாள் கோவிலுக்கு சென்றேன். அங்கு வயதான ஒரு குருஜி விநாயகர் சிலை ஒன்றை எண்ணெய்க்குள் முக்கி பூஜை செய்துகொண்டிருந்தார்.

என்ன சிறப்பு என்ன கேட்டபோது பண்டிகை முடிந்ததும் யாரோ ஒரு விஐபி வீட்டுக்கு இவர் போகப்போகிறார் என சொன்னாராம். பண்டிகை முடிந்து கோவிலுக்கு நான் மீண்டும் சென்ற போது,  ஒரு குழந்தை இது  கலா மாஸ்டர் வீட்டுக்கா... என என்னை பார்த்ததும் எதிர்ச்சியாக கேட்டுள்ளது. 

உடனே அவரும்  இந்த பிள்ளையாரை கலா வீட்டிற்கு அனுப்பிவையுங்கள் என சொன்னாராம்.

பின் என்னிடம்  இனி உனக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் என அவர் கூறினார். அவர் சொன்னதுபோல் அன்று வரை இன்று முதல்    என் வாழ்வில் நிறைய மாற்றங்கள், முன்னேற்றங்கள் வந்தது. இவை அனைத்திற்க்கும் காரணம் அந்த பிள்ளையார் சிலை என கூறினார். மேலும் அந்த சம்பவத்தை நினைத்தால் இன்று வரை எனக்கு மெய் சிலுர்க்கும் என தெரிவித்துள்ளார் கலா.