பாஜகவில் ஏற்கனவே காயத்ரி ரகுராம், நமீதா, குஷ்பு உள்ளிட்டோர்  தீவிரமாக செயல்படும் வரும் நிலையில், தற்போது பிரபல நடன இயக்குனர் கலா, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். 

பாஜகவில் ஏற்கனவே காயத்ரி ரகுராம், நமீதா, குஷ்பு உள்ளிட்டோர் தீவிரமாக செயல்படு வரும் நிலையில், தற்போது பிரபல நடன இயக்குனர் கலா, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

தமிழகத்தில் அழுத்தமாக கால் ஊன்ற நினைக்கும் பாஜக கட்சியில் அடுத்தடுத்து பல பிரபலங்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் இணைந்து வருகிறார்கள். சமீபத்தில் கூட, பாஜக கட்சியில் இணைய உள்ளதாக, விஷால், சந்தானம், வடிவேல், ஆகியோர் பெயர் அடிபட்டது. பின்னர் இது வெறும் வந்தையாகவே கடந்து சென்றது.

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மோகன் வைத்யா, பிரபல தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ், மற்றும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் மகனுமான சுப்பு பஞ்சு அருணாச்சலம் பாஜகவில் இணைந்தனர்.

இவர்களை தொடர்ந்து, தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குநராக வலம் வரும் கலா மாஸ்டர், இன்று மதுரையில் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். தற்போது இவர், பாரதிய ஜனதா கட்சியின், தமிழக துணை தலைவர் வானதி ஸ்ரீனிவாசனுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

Click and drag to move

இன்று தமிழகம் வந்த ஜே.பி.நட்டா முன்னதாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் தலைமையில் பாஜக மாநில மைய குழுக்கூட்டம் நடைபெற்றது, இதில் கலா மாஸ்டர், நடிகை வினோதினி உட்பட பலர் பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Scroll to load tweet…