விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை ஒட்டி வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பீஸ்ட். விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை ஒட்டி இப்படத்தை வெளியிட உள்ளதாக படக்குழு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், பீஸ்ட் படம் குறித்த மாஸ் அப்டேட்டை நடன இயக்குனர் ஜானி வெளியிட்டுள்ளார். அதன்படி இவர் நடனம் அமைத்த புட்ட் பொம்மா பாடலை தூக்கி சாபிடும் வகையில் பீஸ்ட் படத்தில் ஒரு பாடல் இருப்பதாகவும், அந்த பாடல் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார். அவர் கொடுத்த இந்த அப்டேட் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

நடன இயக்குனர் ஜானி, தமிழில் ஏற்கனவே தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் பணியாற்றி உள்ளார். இப்படத்தில் அவர் கோரியோகிராப் செய்த ‘ரவுடி பேபி’ என்கிற பாடல் செம்ம வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தில் பணியாற்றி உள்ள இவர், அடுத்ததாக ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்துக்கும் கோரியோகிராப் செய்கிறார்.