’இவ்வளவு நாட்களும் சிம்புவின் தோழியாக இருந்த நான் இரு தினங்களாக அவரது தீவிர ரசிகையாகிவிட்டேன்’என்று ஒரு பகீர் ட்விட் பகிர்ந்திருக்கிறார் பா.ஜ.க.வின் தமிழக ட்விட்டர் பீரங்கிகளுல் ஒருவரான நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம்.அடடே சிம்பு பா.ஜ.க.வுக்குத் தாவி விட்டாரா அல்லது காயத்ரி டி.ஆர்.கட்சிக்கு ஷிஃப்ட் ஆகிவிட்டாரா என்று கன்ஃபியூஸ் ஆகவேண்டாம். இந்த ட்விட்டை காயத்ரி தட்டிவிட்டிருப்பது கோவாவில் நடந்து வரும் சிம்பு, ஹன்ஷிகா மோத்வானி படப்பிடிப்பு தளத்திலிருந்து. இப்போது மேட்டர் புரிந்துருக்குமே? யெஸ்’மஹா’படத்தில் சிம்பு ,ஹன்ஷிகா ஆடும் கவர்ச்சிகரமான டூயட்டுக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார் காயத்ரி ரகுராம்.

ட்விட்டரில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக கருத்துகள் போட்டு பத்துப்பைசாவுக்கு பெறாமல் வெட்டியாய் மல்லுக்கட்டிக்கொண்டிருந்த நிலையில் இப்படி ஒரு வாய்ப்புக்கு சிபாரிசு செய்த சிம்புவை வாழ்த்துவதில் என்ன தவறு என்று நினைத்தோ என்னவோ சற்றுமுன் போட்ட ட்விட்டில் ஓவர் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார் காயத்ரி ரகுராம்.அந்தப் பதிவில்,...4 வயதில் இருந்தே என் நண்பன் சிம்பு...இந்தப் பாடலில் பணியாற்றியதன் மூலம் சாவதற்குள் சாதிக்க வேண்டிய ஒன்றைச் சாதித்துவிட்டேன். அவரது அறிவையும் திறமையையும் கண்டு மயங்கிவிட்டேன்.இவ்வளவு நாள் அவரது தோழியாக இருந்த நான் இந்தப் பாடலுக்குப் பணியாற்றத் தொடங்கியது முதல் அவரது ரசிகையாகிவிட்டேன்’என்று ஷாக் மேல் ஷாக் கொடுக்கிறார் காயத்ரி.