சமீப காலமாக பெண் இயக்குனர்களின் வருகை திரையுலகில் அதிகரித்து கொண்டே போகிறது. சுதா கொங்கரா, லட்சுமி ராமகிருஷ்ணன், போன்ற இயக்குனர்கள் ஏற்கனவே சில வெற்றி படங்களை கொடுத்துள்ளனர்.

ஓரிரு தினத்திற்கு முன், நடிகை காவேரி கூட தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் உருவாகும் ஒரு படத்தை இயக்க உள்ளதாக அறிவித்தார்.

இவர்களை தொடர்ந்து, பிரபல நடன இயக்குனர் பிருந்தாவும் திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகிய தென்னிந்திய மொழி படங்களுக்கு நடன இயக்குநரானாக பணியாற்றியுள்ள அவர், இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளதற்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

'ஹே சினாமிகா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில்  வாரிசு நடிகர் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரபல நடிகை காஜல் அகர்வால் நடிக்கின்றார். இவருடன் பிரபல நடிகை அதிதி ராவ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 

இன்று நடைபெற்ற இந்த படத்தின் பூஜையில், இயக்குனர் மணிரத்தினம், சுகாசினி, குஷ்பூ, பாக்யராஜ் போன்ற பலர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  

இதுகுறித்து நடன இயக்குனர் பிருந்தா பட பூஜை போடப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்தியவர்களுக்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.