பிரபல நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸின் உதவியாளராகவும்,  நடன குழுவில் ஒருவராகவும் இருந்தவர் பரத்.  35 வயதாகும்,  இவர் புதன் கிழமையன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்களை அதிர்ச்சியாக்கியது.

இவரின் தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவரின் நண்பர்களை விசாரித்ததில் மிகுந்த மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

மாற்றுத்திறனாளியான பரத், சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில், தன்னுடைய நண்பர்களுடன் வீடு எடுத்து வசித்து வந்த வந்தார். மேலும் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.  ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்ட பிரபலங்களின் குழந்தைகளுக்கு டான்ஸ் மாஸ்டராகவும்  பணியாற்றி வந்தார். இதனால் சினிமா வட்டாரத்தில் இவரை தெரிந்தவர்கள் பலர் உள்ளனர். 

இந்நிலையில் இவர், திடீரென கடந்த புதன்கிழமையன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பரத்துடன் தங்கி இருந்த நண்பர்கள் வட்டாரத்தில், விசாரிக்கையில் 'ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல நடன நிகழ்ச்சிகளை நடத்தியும், பரத்துக்கு சினிமாவில் எந்த ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும்,  பல இடங்களில் பெண் பார்த்தும், மாற்றுத்திறனாளி என்பதால் இவருக்கு பெண் கொடுத்த சிலர் தயக்கம் காட்டியதால் மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்டதாக கூறியுள்ளனர்.  எனவே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி பரத்  தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். 

மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், தன்னுடைய திறமையால் பல பிரபலன்களால் நன்கு அறியப்பட்ட இவரின் இந்த தற்கொலை முடிவு, சினிமா வட்டாரத்தையே அதிர்ச்சியாக்கியுள்ளது.