Dance director Kala says Julie is very good and she will be the guide.

பிக்பாஸில் கலந்து கொண்டு பெரும்பாலானோரிடம் வெறுப்பை சம்பாதித்த ஜூலி மிகவும் நல்லவள் என்றும் அவளுக்கு தான் வழிகாட்டியாக இருப்பேன் எனவும் நடன இயக்குனர் கலா தெரிவித்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகியது. இதில் மற்ற கலைஞர்களுடன் ஜூலி என்ற ஆட்டொ ஓட்டுனரின் மகளும் கலந்து கொண்டார். 

இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து மக்களின் கவனத்தை தனியாக ஈர்த்தார். 

இதையடுத்து பிக்பாஸில் கலந்து கொண்டு மக்களின் எதிர்ப்பார்ப்பை தவிடு பொடியாக்கினார் ஜூலி. இதனால் தமிழகம் எங்கும் ஜூலி எதிர்ப்பலைகள் கிளம்பின. 

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது ஜூலிக்கு ஆங்கராக வேண்டும் என்பது தனது ஆசை என தெரிவித்திருந்தார். 

அதன்படி தற்போது ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினி வாய்ப்பை ஜூலிக்கு கொடுத்துள்ளார் நடன இயக்குனர் கலா.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, பிக்பாஸில் கலந்து கொண்டு பெரும்பாலானோரிடம் வெறுப்பை சம்பாதித்த ஜூலி மிகவும் நல்லவள் என்றும் அவளுக்கு தான் வழிகாட்டியாக இருப்பேன் எனவும் தெரிவித்தார். 

மேலும் ஆரம்ப கால கட்டத்தில் அனைவருக்கும் ரஜினி கமல் போன்றவர்களை பிடிக்கும்போது தனக்கு ரகுவரனைதான் பிடிக்கும் எனவும் ஜூலி முன்பு இருந்ததை விட மிகவும் பொறுப்பாக செயல்படுகிறார் என தெரிவித்தார்.