ரஜினி நடித்த காலா படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தலித் பட லிஸ்டில் இணைத்துள்ளதால் திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நியூயார்க்கில் அடுத்த மாதம் 23, 24ம் தேதிகளில் தலித் ஃபிலிம் ஃபெஸ்டிவல் நடக்க இருக்கிறது. இதில் தலித்தியம் திரைப்படங்களும் குறும்படங்களும் திரையிடப்பட உள்ளன.  இதற்காக 7 திரைப்படங்கள் தேர்வாகி உள்ளன. அதில் தமிழில் இருபடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய காலா ஆகிய படங்கள் தலித் பட வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன. பரியேறும் பெருமாள் தலித்தியம் பேசும் கதை. ஆகையால் இந்த பட வரிசையில் இடம்பெற்றது ஆச்சர்யமில்லை. 

ரஜினி நடித்த காலா படம் இதில் சேர்க்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தலித்தியம் பேசும் படம் என பா.ரஞ்சித் உறுதியாக அந்தப்படத்தில் நடித்திருக்க மாட்டார் என்கிறார்கள். ரஜினியின் வழக்கமான ஸ்டைல் பாணியை தனது இரு படங்கள் மூலம் பா.ரஞ்சித் பாழ்படுத்தி விட்டார் என விமர்சனம் எழுந்துள்ள நிலையில் காலா படத்திற்கு பா.ரஞ்சித் சாதியம் பூசி இருப்பதால் ரஜினி ரசிகர்கள் அதிருப்தியாகி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை அமெரிக்காவில் உள்ள அம்பேத்கரிஸ்ட் அமைப்பு ஒருங்கிணைத்து உள்ளது. இதில் பா.ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

பா.ரஞ்சித் தனது சாதிய பூச்சுக்கு ரஜினியின் பெயரை பயன்படுத்திக் கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ரஜினி ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.