யாருக்கும்  கிடைக்காத ஒன்று...எனக்கு கிடைத்து உள்ளது..! தக்ஷன் பெருமிதம்....!

கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நேற்றுடன் நிறைவு பெற்றது.இந்த நிகழ்வில் பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகேஷ் என அறிவிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. 

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் டைட்டில் வின்னர் பெரும் வாய்ப்பு போட்டியாளர் தட்ஷனுக்கு உண்டு என பல்வேறு கருத்துக்கள், சமூக வலைதளங்களில் பார்க்கமுடிந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக தக்ஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் ஃபைனல் லிஸ்டில் இருந்தது லாஸ்லியா,சாண்டி,ஷெரின், முகேன் இவர்கள் நால்வரில் யார் டைட்டில் வின்னர் பெற போகிறார் என்ற எதிர்பார்ப்பு நேற்று அதிகமாக இருந்தது.

ஷெரின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பின்னர், மற்ற மூன்று பேரில் லாஸ்லியா வெளியேற்றப்பட்டார். பின்னர் முகேன் மற்றும் சாண்டி இருவர் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள்  இருந்தனர். இருவரில் யாருக்கு டைட்டில் வின்னர் அறிவிக்கப்போகிறார்களோ என்று அனைவரின் கவனமும் நிகழ்ச்சியின் மீது திரும்பியது. பின்னர் இருவரையும் வெளியே அழைத்து கமல் டைட்டில் வின்னரை அறிவிக்கிறார்.

இந்த நிகழ்வு இந்த நிகழ்விற்கு முன்பாக மற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. அந்த நிலையில் தக்ஷனை அழைத்து சிறப்பு பரிசு வழங்கிய பின் யாரும் எதிர்பாராதவிதமாக இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில்,  கமலுக்கு சொந்தமான ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம், படத்தில் நடிக்க தக்ஷனை ஒப்பந்தம் செய்யப்படுகிறார் என கமல் தனிப்பட்ட முறையில் அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கி சிறப்பித்தார்.

அப்போது தக்ஷன் நன்றி தெரிவித்ததோடு, டைட்டில் வின்னர் பெறவில்லை என்றாலும் யாருக்கும் கிடைக்காத ஒன்று எனக்கு கிடைத்து உள்ளது. நான் வெளியேறியவுடன் என்னுடைய ஆதரவாளர்கள், ரசிகர்கள் கண்ணீர் சிந்தி உள்ளனர். அந்த ஒரு விஷயம் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை .இதைவிட வேறு என்ன எனக்கு வேண்டும் என பெருமையாக பேசினார். அப்போது அங்கு  கூடியிருந்தவர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.