இயக்குனரும், தயாரிப்பாளருமான சி.வி.குமார் 'மாயவன்' படத்தை தொடர்ந்து தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம், கேங்ஸ் ஆப் மெட்ராஸ். 

இயக்குனரும், தயாரிப்பாளருமான சி.வி.குமார் 'மாயவன்' படத்தை தொடர்ந்து தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம், கேங்ஸ் ஆப் மெட்ராஸ்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்தில் அசோக், பிரியங்கா ருத் ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவந்தந்த நிலையில், வரும் ஏப்ரல் 12ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

இந்நிலையில் இப்படம் குறித்து, தயாரிப்பாளரும், இயக்குனருமான சி.வி.குமார் கூறுகையில், "இது ஒரு போதை மருந்து கடத்தல் தொடர்பான கேங்ஸ்டர் படம்... இந்த கும்பலில் சிக்கிய பெண், எப்படி தப்பிக்கிறாள் என்பதே இந்த படத்தின் கதை."

இந்த பெண் கேரக்டர்தான் மிகவும் பவுர்ஃபுல்லானது. நான்கு ஆண்களை அடித்து வீழ்த்துவது போல் ஹீரோயின் வேண்டும் என எண்ணினோம். எனவே காட்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என நிஜமாகவே அடிக்க வேண்டும். அடி வாங்க வேண்டும். சண்டைக் காட்சியில் காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று ஆரம்பத்திலேயே சில முன்னணி கதாநாயகிகளிடம் கூறினோம்.

அவர்களுக்கு கதை பிடித்திருந்தாலும், காயம் ஏற்படும் என்பதால், அவர்கள் நடிக்க முன்வரவில்லை.

எனவே 100 புதுமுகங்களை வைத்து ஆடிஷன் செய்தோம். அதில் மூவரை தேர்வு செய்து பயிற்சிக்கு அனுப்பினேன்... ஆனால், பயிற்சியின் கடுமை தாக்குப்பிடிக்க முடியாமல் 2 நடிகைகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்து விட்டனர். கடைசி வரை கடுமையாக பயிற்சியில் ஈடுபட்ட நடிகை பிரியங்கா ருத் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டார் என கூறியுள்ளார்.