சமீபகாலமாக பிரபலங்களை எல்லாம் விட இணையத்தில் பிரபலமாகி இருப்பது மியூசிக்கலி, டிக்டொக், பெர்ஃபாம்ர்கள் தான். இது போன்ற டப் ஸ்மேஷ்களால் தங்களின் திறமையை வெளிப்படுத்துகிறேன் என்ற பெயரில் சிலர் அத்துமீறுவது முகம் சுழிக்க வைத்தாலும், பாராட்டும்படியான திறமையாளர்களும் இதே செயலிகள் மூலம் வெளிப்படதான் செய்கிறார்கள். 

இப்போது திரையில் வரும் சீரியல்களை விட இது போன்ற வீடியோக்களே மிகச்சிறந்த பொழுதுபோக்காக மாறி இருக்கிறது பலருக்கு. இது போன்று இணையங்களில் வைரல் ஆகும் வீடியோக்களால் பிரபலமானவர்கள் பலர். அதிலும் சின்ன சின்ன க்யூட்டான செயல்களால் எக்கச்சக்கமான ரசிகர்களின் உள்ளத்தைஅந்த வகையில் சமீபத்தின் இணையத்தில் வைரலாகி இருக்கிறது இந்த குட்டிப்பெண்ணின் க்யூட் வீடியோ. பிரபல பாடல்களுக்கு க்யூட்டாகவும் மாஸாகவும் இந்த அழகு குட்டி பெண் கொடுக்கும் எக்ஸ்ப்ரெஷன்களுக்கு முன்னால், பெரிய பெரிய நடிகர்கள் கூட தோற்றுப்போவார்கள், அந்த அளவிற்கு முகபாவத்தால் அசத்தி இருக்கிறார் இந்த குழந்தை.

 

பாடல்களாகட்டும் , டப் ஸ்மேஷாகட்டும் இவரின் எக்ஸ்பிரஷனில் எல்லாமே ஆஸம் தான். அதிலும் தெறி படத்தில் வரும் காட்சிகளை இவர் டப்ஸ்மேஷ் செய்திருப்பதை பார்க்கும் போது அப்பட்டியே நைனிகாவை தான் நியாபகபப்டுத்துகிறார் இந்த குட்டி தேவதை.