culprits left only advocate punished - Kamal
செய்தியாளர்கள் சந்திப்பில் மலையாள நடிகையின் பெயரை சொன்னதால் கமலுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாம். அதற்கு “குற்றவாளிகளை விட்டு விட்டு, வழக்கறிஞரை தண்டிப்பது போல் உள்ளது” என்று நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் தற்போது மலையாள நடிகை கடத்தல் தொடர்பான சர்ச்சை வரை பல குற்றச் சாட்டுகள் உலகநாயகன் கமல்ஹாசன் மீது எழுந்துள்ளது.
ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல் கூறியது:
“மலையாள நடிகை கடத்தல் வழக்கில் சட்டமும், நீதியும் சரியாக செயல்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர் பக்கம் நான் உள்ளேன்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், மலையாள நடிகர் கைது விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரைப் பயன்படுத்தியதாக கமலுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாம்.
இதனைத் தொடர்ந்து கமல் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “நான் யாருக்காகவும் காரணமின்றி வளைந்துக் கொடுப்பவன் அல்ல. பெண்களை நேசிப்பவனும், அவர்களின் உரிமைக்காகவும் போராடுபவன் நான். குற்றவாளிகளை விட்டு விட்டு, வழக்கறிஞரை தண்டிப்பது போல் உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
