தேசிய ஜூனியர்களுக்காக நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் 12 வயது மகன் வேதாந்த் 3 தங்கப்பதக்கத்தையும் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார். இச்செய்தியை மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெருமையுடன் பதிவிட்டுள்ளார்.

மிகவும் ஆச்சர்யகரமான செய்தியாக இன்றைய முன்னணி நடிகர்கள் பலரும் தங்கள் வாரிசுகளை சினிமாவில் திணிக்காமல் அவர்கள் போக்கில் வளரவிடுகிறார்கள். விஜய், சூர்யா போன்ற இப்பெருமைக்குரிய பெற்றோர்கள் வரிசையில் தற்போது மாதவனும் இணைந்துள்ளார். 

 தற்போது தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட வேதாந்த், மூன்று தங்கப்பதக்கங்களையும் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'உங்களின் ஆசி, வாழ்த்துக்கள், கடவுளின் அருளால் வேதாந்த் மீண்டும் எங்களை பெருமை அடையச் செய்துள்ளார். தேசிய அளவில் தனியாக பதக்கம் வாங்குவது இதுவே முதல் முறை. அடுத்து ஆசிய போட்டிகள். பயிற்சியாளர்கள், குழுவினருக்கு நன்றிகள்' என்று பதிவிட்டுள்ளார். இச்செய்தியுடன் தனது மகனின் சாதனையைக் காட்டும் சிறிய வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மாதவன்.