‘சர்கார்’படத்துல உங்கள வச்சு செஞ்சதை விட நாங்க இன்னும் அதிகமாத்தானே செஞ்சோம். அப்பிடியிருக்கப்ப அவங்களுக்கு மட்டும் ஓவர் பப்ளிசிட்டி குடுத்துட்டு எங்கள மட்டும் கண்டுக்காம விட்டுட்டீங்களே? என்று ஐயோ பாவமாக ஒரு ட்வீட் பண்ணியிருக்கிறார் தமிழ்ப்படம்2’ வின் டைரக்டர் சி.எஸ். அமுதன்.

தமிழ்ப்படம்2’ சில வாரங்களுக்கு முன்பு ரிலீஸாகி அதன் முதல் பாகம் அளவுக்கு பரபரப்பாக ஓடாமல் சுமாராகவே ஓடியது. அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே ஓ.பி.எஸ்.சின் தர்மயுத்தம்தான். அதுபோக படத்தில் அமைச்சர்கள் அழுதபடியே பதவி ஏற்பது உள்ளிட்ட சில காட்சிகளில் ஆளும் கட்சியை கடுமையாக நக்கலடித்திருந்தார் அமுதன்.

இதனால் படம் ரிலீஸாகும் சமயம் அமைச்சர்கள் மத்தியில் கண்டனங்கள் எழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க.வினர் யாரும் தமிழ்ப்படம்2’வை பொருட்படுத்தவில்லை. அந்த ஆதங்கத்தை இதுவரை பொறுத்துக்கொண்டிருந்த அமுதன் இன்று சர்கார் படத்துக்கு கிடைத்திருக்கும் விளம்பரத்தால் செல்லமாகப் பொங்கியெழ ஆரம்பித்துவிட்டார். 

’ஸ்டேண்ட் வித் சர்கார்’ என்ற ஹேஷ்டேக்கில் இதைப்பகிர்ந்த அமுதன்,’ ஒரே செயலைச் செய்த இருவருக்கு நீங்கள் அளித்திருக்கும் விளம்பரம் பாரபட்சமாக இருக்கிறது. நாங்களும் சர்கார் மாதிரி எங்களால் முடிந்த  அளவுக்கு உங்கள வச்சு தான செஞ்சோம்’ என்கிறார். 

உங்கள சிரிப்புப் போலீஸ்ன்னு நெனச்சிட்டாங்க போல சி.எஸ்.அமுதன்.