பல ஆண்டுகளாக காதலித்து வரும் நயநன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஊர் ஊராக சுற்றுகிறார்கள். ஆனால் திருமணத்தை தள்ளி வைத்துக் கொண்டே செல்கிறார்கள். ஆனால் அவ்வப்போது விதவிதமாக போஸ்கொடுத்து ரசிகர்களை வெறுப்பேற்றுகிறார்கள். இன்று 35 வது பிறந்தநாளை கொண்டாடும் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் போட்டு எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றி இருக்கிறார்கள். 

அதனை கண்டு வெறுப்பான ஒரு ரசிகர், இந்த போட்டோ.. வெங்காயம் எல்லாம் வேணாம்... கல்யாணம் பண்ணுவீங்களா..? மாட்டீங்களா..?  என எரிச்சலாகி இருக்கிறார். இப்படி இருவரும் சேர்ந்து ரசிகர்களை வெறுப்பேற்றுவது இது முதன் முறையல்ல.  2018ம் ஆண்டு நண்பர்கள் தினத்தை முன்னிட்டு, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் மூக்கை மூக்கு உரசும் படி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்ட விக்னேஷ் சிவன், நட்புக்குள் காதல், காதலுக்குள் நட்பு என்கிற கேப்ஷனுடம் புகைப்படத்தை பதிவேற்றினார். 

நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு 3 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த அழகி உடன் கோலமாவு கோகிலா படத்தின் கன் இன் காதல் பாடலுக்கு வொர்க் பண்ணுவதில் செம சந்தோஷம் என ஷூட்டிங் ஸ்பாட்டில் தனியாக இருவரும் எடுத்துக் கொண்ட செஃல்பி புகைப்படத்தை அரங்கேற்றினார். வெள்ளை நிற சுடிதாரில் நெற்றியில் திருநீரு, குங்குமம் இட்டு பக்தி பரவசமாக விநாயகர் சதுர்த்தியை தனது காதலன் விக்னேஷ் சிவன் உடன் கொண்டாடிய புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டது. 

அம்ரிதசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு காதலி நயன்தாராவுடன் டூர் சென்ற விக்னேஷ் சிவன், அங்கே இரவு பகலாக எடுத்துக் கொண்ட ஏகப் பட்ட புகைப்படங்களை தனது ரசிகர்களுக்கு ஷேர் செய்து மகிழ்ந்தார். செம டெக்கரேஷன் உடன் அந்த ஆண்டு நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை அவருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார் விக்னேஷ் சிவன். 

கடந்த ஆண்டு விக்னேஷ் சிவன் பிறந்தநாள் அன்று இருவரும் பிளாக் கலர் டிரெஸ் அணிந்து கொண்டு படு ரொமான்டிக்காக எடுத்துக் கொண்ட காதல் தருண புகைப்படங்களை ரசிகர்களுக்கு ஷேர் செய்து எப்போ தாங்க உங்க கல்யாணம் என்ற கேள்வியை மீட்டெழுப்பினர். விக்னேஷ் சிவன் உடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை மொபைல் போனில் காட்டியபடி கடந்த ஆண்டு கிருஸ்துமஸ் பண்டிகையை இருவரும் கொண்டாடிய புகைப்படங்கள் ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவையும் ஆட்சி செய்தது. 

ஓணம் பண்டிகையை நயனும் விக்கியும் தனி விமானத்தில் கொச்சின் பறந்து தனது வீட்டில் எடுத்துக் கொண்ட ஓணம் புகைப்படங்கள் வெளியாகி வெறுப்பாக்கின. கேரளாவுக்கு சென்றுள்ள நயன்தாராவும் விக்னேஷ் சிவனும், சமீபத்தில் நயன்தாராவின் அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடினார்கள். இப்போது விக்னேஷ் சிவனின் பிறந்தநாளையும் கேரளாவிலே கொண்டாடி இருக்கின்றனர். அதில் ஒருவர் இடையில் மாறி மாறி கைபோட்டு புகைப்படத்தை பதிவேற்றி இருக்கிறார் நயன்தாரா. இதனால் வெறுப்போன அவரது ரசிகர் ஒருவர் இந்த போட்டோ.. வெங்காயம் எல்லாம் வேணாம்...கல்யாணம் பண்ணுவீங்களா..? மாட்டீங்களா..? என கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.