பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் சௌரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக உள்ளதை அவரே உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் சௌரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக உள்ளதை அவரே உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சமீப காலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், எடுக்க பட்ட சச்சின் வாழ்க்கை படம், தோனியின் வாழ்க்கை படம் மற்றும் மற்ற விளையாட்டு வீரர்களின் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதை தொடர்ந்து தற்போது தாதா என அன்பாக அழைக்கப்படும், சௌரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளது. இந்த தகவலை அவரே சில தனியார் பத்திரிக்கை செய்திகளில் பேட்டியளித்த உறுதி செய்துள்ளார். இவரது வாழ்க்கை படத்தில் ஒரு கிரிக்கெட் வீரராக கங்குலி தன்னுடைய வாழ்க்கையை துவங்கியது முதல், அணித்தலைவராக இருந்தது, இவர் விளையாடியபோது நிகழ்த்தப்பட்ட சாதனைகள், மற்றும் தற்போது வரை உள்ள காட்சிகள் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல் இதுவரை வெளியாகாத நிலையில், தயாரிப்பு நிறுவனம் மட்டும் சில முறை கங்குலியை சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கங்குலி வேடத்தில் நடிக்க நடிகர் ரன்பீர் கபூர் பொருத்தமாக இருப்பர் என்று அவருடன் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை இதுகுறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிபிடத்தக்கது.

இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட்டிங் பணிகள் துரிதமாக நடந்து வருவதாகவும், கூடிய விரைவில் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.