’விஸ்வாசம்’ படம் தொடர்பாக தனக்கு 78 லட்சம் கடன் பாக்கி இருப்பதால் படத்தை நாளை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று ஒரு ஃபைனான்சியர் தொடர்ந்த வழக்கில் படத்தை கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் தடைவிதித்தது. சற்றுமுன்னர் காட்டுத்தீயாய்ப் பரவிய இச்செய்தியால் அஜீத் ரசிகர்கள் அதிர்ச்சி அடந்துள்ளனர்.

விஸ்வாசம் தயாரிப்பு தரப்பு தனக்கு 78 லட்சம் செட்டிமெண்ட் பண்ணாமல் படத்தை ரிலீஸ் செய்ய முயல்வதாகவும் அதை தனக்கு செட்டில் பண்ணாவிட்டால் படத்தை ரிலீஸ் செய்ய தடைவிதிக்கவேண்டும் என்றும்  கோவை விநியோகஸ்தர் சாய்பாபாபட ரிலீஸுக்கு முந்தைய  நாள் வழக்கு போட்டது கோடம்பாக்கத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பின்னர் தயாரிப்பாளர் தரப்பு  தடையை நீக்கக்கோரும் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அந்த மனுவில் 78 லட்சத்தில் 38 லட்சத்தை இன்றே வழங்கிவிடுவதாகவும் மீதி 40 லட்சத்தை வழங்க 4 நாட்கள் அவகாசம் வேண்டுமென்றும் கோரப்பட்டது. அந்த மனு அவசர மனுவாக இன்று மதியமே விசாரிக்கப்படுகிறது.