Asianet News TamilAsianet News Tamil

படம் இயக்கத் தடை வாங்கிய தயாரிப்பாளர்...மிஷ்கினின் ‘சைக்கோ’வா அல்லது மிஷ்கினே ஒரு சைக்கோவா?....

இதற்கு ஒப்புதல் தெரிவித்த மிஷ்கின் ரூ. 3 கோடி சம்பளம் கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு இதுகுறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சம்பளத்தின் முன்பணமாக ஒரு கோடி ரூபாய்க்கான 2 காசோலையை தயாரிப்பாளர் ரகுநந்தன் மிஷ்கினுக்கு வழங்கியுள்ளார்.

court stays director myskin to direct thriller movies
Author
Chennai, First Published Dec 25, 2018, 9:49 AM IST

தயாரிப்பாளர்கள் மற்றும் ஃபனான்சியர்களிடம் பெரும் பணம் பெற்றுக்கொண்டு அவர்களது வாரிசுகளை ஹீரோவாக்குவது அல்லது ஆக்குவதாக ஆசைகாட்டி மோசம் செய்யும் போக்கு தமிழ்சினிமாவில் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அப்படி ஒரு மோடியில் ஈடுப்பட்டு ‘சைக்கோ’ படத்தை இயக்கிவரும் மிஷ்கின் மீது கோர்ட்டில் வழக்குப் போட்டு தடை வாங்கினார் ஒரு தயாரிப்பாளர்.court stays director myskin to direct thriller movies

சென்னை அடையாரை சேர்ந்த தயாரிப்பாளர் ரகுந்தன் என்பவர் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். ’கேப்டன் பிரபாகரன்’,’சின்னக்கவுண்டர்’ உள்ளிட்ட பல படங்களுக்கு நிதியுதவி செய்துள்ளார். இவர் தனது மகன் மைத்ரேயாவை வைத்து க்ரைம் திரில்லர் படம் எடுக்க முடிவு செய்து இயக்குநர் மிஷ்கினை அணுகியுள்ளார்.

இதற்கு ஒப்புதல் தெரிவித்த மிஷ்கின் ரூ. 3 கோடி சம்பளம் கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு இதுகுறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சம்பளத்தின் முன்பணமாக ஒரு கோடி ரூபாய்க்கான 2 காசோலையை தயாரிப்பாளர் ரகுநந்தன் மிஷ்கினுக்கு வழங்கியுள்ளார்.

அப்பணத்தை சிறப்பாக செலவழித்து முடித்த மிஷ்கின் அடுத்து ’சவரக்கத்தி’,’துப்பறிவாளன்’ என அடுத்தடுத்து படங்களை இயக்கி தொடர்ந்து ரகுநந்தனுக்கு டேக்கா கொடுத்து வந்தார். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு சொன்ன ‘சைக்கோ’ கதையை உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து இயக்கவும் ஆரம்பித்தார். அதைக்கண்டு கொதித்து பத்திரிகைகளில் மிஷ்கினின் முகமூடியைக் கிழித்த ரகுநந்தன்  கோர்ட்டில் மிஷ்கின் மீது வழக்கும் தொடர்ந்தார்.court stays director myskin to direct thriller movies

இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தன் மகனை வைத்து மிஷ்கின் இயக்குவதாக சொன்ன க்ரைம் திரில்லர் படத்தை வேறு யாரையும் வைத்து இயக்கக் கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும் என ரகுநந்தன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து க்ரைம் திரில்லர் திரைப்படங்கள் எடுக்க இயக்குநர் மிஷ்கினுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ரகுநந்தன் தரப்பில் கூறப்பட்டுள்ள புகாருக்கு பதிலளிக்க மிஷ்கினுக்கு உத்தரவிட்டு வழக்கை ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

கோர்ட் உத்தரவு தனக்கு சாதகமாக வந்திருக்கும் நிலையில் மிஷ்கின் குறித்த சில அதிரடி செய்திகளைத் தெரிவிக்க இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் தயாரிப்பாளர் ரகுநந்தன்.

Follow Us:
Download App:
  • android
  • ios