Asianet News TamilAsianet News Tamil

Allu Arjun : தெலுங்கானாவில் வாகன நெரிசலா? அல்லு அர்ஜுன் விளம்பரத்தை நீக்க உத்தரவிட்ட கோர்ட்

Allu Arjun  : நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த Rapido விளம்பரத்தை உடனடியாக ஊடகங்களிலிருந்து நீக்க தெலுங்கானா சிவில் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 

Court orders removal of Allu Arjun advertisement
Author
Chennai, First Published Dec 7, 2021, 2:21 PM IST

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது நடித்துள்ள புஷ்பா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் என அனைத்தும் வெர்லெவலில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் சமிபத்தில் இவர் நடித்திருந்த விளம்பரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகர்கள் விளம்பரங்களில் நடிக்கும் போது பொறுப்புடன் நடந்துகொள்வதில்லை என்கிற புகார் பல முன்னணி நடிகர்கள் மீது எழுந்துள்ளது. ஏற்கனவே ஹிப்பி மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் அமிதாப் பச்சன்  நடித்திருந்தார். பின்னர் அந்த நூடுல்ஸ் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என கண்டறியப்பட்ட பிறகு பலதரப்பட்ட விமர்சனங்களை அமிதாப் சந்தித்தார். அதே போல கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைகளில் கலப்படம் இருப்பதாக எழுந்த புகாரில் நடிகர் பிரபு நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு பெற உதவும் Rapido ஆப் விளம்பரத்தில் டீ கடைக்காரராக நடித்தறிந்த அல்லு அர்ஜுன் , தெலுங்கானா வாகன நெரிசலில் இருந்து தப்பிக்க Rapido ஆப் உதவியாக இருக்கும் என்பது போல வசனம் பேசியிருப்பார்.

 

இந்த விளம்பரம் படு வேகமாCourt orders removal of Allu Arjun advertisementக பிரபலமானது. இது குறித்து ஏற்கனவே  பேசியிருந்த தெலங்கானா அரசு போக்குவரத்து கழக நிர்வாக மேலாளர் சஜ்ஜனார் ;  அரசு சேவை நிறுவனங்களை அவமதிப்பு செய்யும் இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதை அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதை தொடர்ந்து அந்த நிறுவனம் விளம்பரத்தில் சிறிய மாற்றம் செய்ததே தவிர, அரசு பேருந்துகள் பற்றிய விமர்சனத்தை நீக்கவில்லை.

தெலங்கானா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அந்த விளம்பரத்தை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்போது அந்த வீடியோவை நீக்க உத்தரவிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios