Asianet News TamilAsianet News Tamil

கோர்ட் தடை நீங்கியது... மே 4ம் தேதி ரிலீஸாகுமா ‘களவாணி 2’?...

ஜூன் 10 வரை ரீலீஸாக தடை வாங்கப்பட்ட இயக்குநர் சற்குணத்தின்  ’களவாணி 2’ படத்திற்கு விதிக்கப்பட்ட  தடையை விலக்கி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
 

court clears kalavani 2 stay
Author
Chennai, First Published Apr 26, 2019, 12:40 PM IST

ஜூன் 10 வரை ரீலீஸாக தடை வாங்கப்பட்ட இயக்குநர் சற்குணத்தின்  ’களவாணி 2’ படத்திற்கு விதிக்கப்பட்ட  தடையை விலக்கி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.court clears kalavani 2 stay

நடிகர் விமல், ஓவியா உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் `களவாணி 2'. இந்த திரைப்படம் வருகிற மே 4-ந் தேதி வெளியாக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான வர்மாண்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது. உடனே இந்த படத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் குமரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், களவாணி 2 என்ற திரைப்படத்தின் உரிமையை மெரினா பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளேன். அதனால், அந்த திரைபடத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், `களவாணி 2' திரைப்படத்தை ஜூன் 10-ந் தேதி வரை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த தடையை நீக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வர்மாண்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் படத்தின் இயக்குநருமான  ஏ.சற்குணம்  மனு தாக்கல் செய்தார். அதில், ‘களவாணி 2 தலைப்பை, களவாணி திரைப்படத்தை தயாரித்த ஷெர்லி பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கினேன். ’களவாணி 2’ திரைப்படத்தை  நான் மட்டுமே தயாரித்து இயக்கியுள்ளேன். இந்த தலைப்புக்கும், திரைப்படத்துக்கும், குமரன், மெரினா பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சிங்காரவேலன் ஆகியோருக்கு தொடர்பு எதுவும் இல்லை. தவறான தகவல்களை அளித்து, இந்த திரைபடத்துக்கு தடை பெற்றுள்ளனர். எனவே, இந்த தடையை நீக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.court clears kalavani 2 stay

இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சுதா ஆஜராகி வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ’களவாணி 2’ திரைப்படத்துக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார். ஆனாலும் மே 4ம் தேதி இப்படம் ரிலீஸாக வாய்ப்பில்லை என்கிறது சிங்காரவேலன் வட்டாரம்.

Follow Us:
Download App:
  • android
  • ios