நேற்று வெளியாகியிருக்கும் கருப்பு நயன்தாரா, சிவப்பு நயன்தாரா என இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் ‘ஐரா’ படத்தில் மீடியாவில் வேலை பார்க்கும் பெண்கள் குறித்து மிகவும் கொச்சையான காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கிறது.

நயன்தாராவை பெண் பார்க்கவரும் ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளை “நீ இப்ப மீடியாலதான இருக்கே… இந்த இடத்துக்கு வர்றதுக்கு எத்தனை பேரை 'பாத்திருப்ப’..? லைஃப ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு அப்புறமா கல்யாணம் பண்ணிக்கிறதவிட கல்யாணம் பண்ணிட்டு இதே மாதிரி என்ஜாய் பண்ணு. எனக்கொண்ணும் ஆட்சேபணையில்லை.!” என்று  மானங்கெட்டத்தனமாகச் சொல்கிறான்.

காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் இதே கருத்தை முன்பு பேசியபோது ஒட்டு மொத்த மீடியாவினரும் பொங்கி தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். அவரது வீட்டை முற்றுகையிட்டு அசிங்கப்படுத்தினர். இன்றுவரையிலும் எந்தவொரு சினிமா மேடையிலும் எஸ்.வி.சேகரால் ஏற முடியவில்லை. ஆனால் இன்றைக்கு நயன்தாரா விஷயத்தில் அனைவரும் கப்சிப்.

அந்தக் காட்சியின் தொடர்ச்சியாக நயன்தாரா அவனை நாகரீகமாக சில வார்த்தைகளை உதிர்த்துத் திட்டிவிட்டு, கடைசியாக “உங்கம்மா உனக்கு ‘ஆதி’ன்னு பேர் வைச்சத்துக்கு பதிலா  என்றபடி அனைவரும் சுலபமாக யூகிக்கக்கூடிய ஒரு கெட்ட வார்த்தைக்கு கேப் வைத்துவிட்டுப்போகிறார். . சில தினங்களுக்கு முன்பு நயன்தாரா பற்றி ராதாரவி ஆபாசமாக பேசியபோது ஒட்டு மொத்த மீடியாவும் நயன்தாரா பக்கம் நின்றது. அதே நயன்தாரா தான் நடித்திருக்கும் படத்தில் பெண்களின் உறுப்பு பற்றி நினைக்க வைக்கும் ஒரு கெட்ட வார்த்தையை திரைப்படத்தில் பேசியிருக்கிறார்.

இதற்கும் ராதாரவி மேடையில் பேசிய “கையெடுத்துக் கும்பிடுறவங்களையும் போடலாம். கை தட்டி கூப்பிடுறவங்களையும் போடலாம்” என்பதற்கும் என்ன வித்தியாசம்..? இது பற்றி மீடியாக்களில் இருக்கும் எந்த பெண்ணும் இதுவரையிலும் வாய் திறக்கவில்லை. ஆண்களும் வழக்கம்போல ‘தலைவி’யை தரிசித்த சந்தோஷத்தில் இந்த விஷயத்தில் மவுனம் காக்கிறார்கள்.

எஸ்.வி.சேகர், ராதாரவி பேசினால் பொங்குகிறவர்கள், நயன்தாரா விஷயத்தில் ஏன் இப்படி அமைதி காக்கிறார்கள்…?இப்படியே போனால் அடுத்தடுத்த படங்களில் அனைத்து தரப்பினரும் மீடியாவை இன்னும் கேவலமாக சித்தரிப்பார்கள். பேசுவார்கள். அப்படியானால் ராதாரவிக்கு ஒரு நீதி நயன்தாராவுக்கு ஒரு நீதியா?