முன்பெல்லாம் ஒருவர் ஒருதுறையில் வெற்றிபெற்றால், அவர் நம்ம ஜாதியைச் சேர்ந்தவரா என்கிற அரிப்பில் கூகுளில் தேடும் கூட்டம் ஆண்கள் சமாச்சாரத்தில் மட்டுமே இருந்தது. பெண்கள் விவகாரத்தில் என்ன காரணத்தாலோ ஜாதி அவ்வளவு முக்கியமான பொருட்டாய் இருக்கவில்லை.

ஆனால் என்ன காரணத்தாலோ, முக்கியமாய் இயக்குநர் பா.ரஞ்சித்தின் படத்தில் நடித்ததாலோ அல்லது ‘பிக் பாஸ்’ இரண்டாவது சீஸனில் டைட்டில் பட்டம் வென்றதாலோ  ரித்விகாவின் ஜாதியைத் தெரிந்துகொள்ள பலரும் வெறிகொண்டு அலைந்திருக்கிறார்கள். கூகுலில் ‘ரித்விகாவின் ஜாதி’ என்ற தலைப்பில் சுமார் 3 லட்சம் பேர் வரை தேடித் தவித்திருக்கிறார்கள்.

கலை உலகில் வளர்ந்து ஒரு பெண்ணுக்கு எவ்வளவு எரிச்சலைத் தரக்கூடிய செய்தி இது? எனவே இப்படித் தேடியவர்களுக்கு... “ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு... நான் குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவள் என்பதால் பிக் பாஸில் வின்னர் ஆனேன் என்று விமர்சிப்பவர்களுக்கு... நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா...” என்று  செருப்படி பதில் தந்திருக்கிறார் ரித்விகா.

ரித்விகா என்ன ஜாதிப்பொண்ணுன்னு  இனியும் தெரிஞ்சிக்கணுமா மக்கா