சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 8,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனர். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 170 பேருக்கு இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: அட்லிக்கு ஆப்பு வைத்த லோகேஷ் கனகராஜ்... தளபதியை “மாஸ்டர்” பிளான் போட்டு தூக்கிட்டார் போல...!

கொரோனா பீதியால் ஏற்கனவே தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஏற்கனவே படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. கோலிவுட்டில் மட்டும் நேற்று வரை படப்பிடிப்புகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை அனைத்து படப்பிடிப்புகளையும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னதாகவே மக்கள் அதிகம் ஒன்று கூடுவதை தவிர்க்கும் விதமாக மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றை மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் 990 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இன்று முதல் சூப்பர்  ஸ்டாரின் “அண்ணாத்த”, அஜித்தின் “வலிமை”, கமல் ஹாசனின் “இந்தியன் 2”, மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்”, விக்ரமின் “கோப்ரா” உட்பட 36 படங்களின் ஷூட்டிங் நிறுத்தப்படுகிறது. 60 டி.வி. சீரியல்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்படுகின்றன. 

இதையும் படிங்க: தமிழ் சினிமாவை தட்டித்தூக்கும் சன்பிக்சர்ஸ்... 1000 கோடி பட்ஜெட்டில் போட்ட மெகா பிளான்...!

தியேட்டர்கள் மூடப்பட்டதால், ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டள்ள விஜய்யின் மாஸ்டர் பட நிலை என்ன என தளபதி ஃபேன்ஸ் கவலையில் உள்ளனர். அதேபோல் ஜோதிகா நடிப்பில் மார்ச் 27ம் தேதி வெளியாகவிருந்த “பொன்மகள் வந்தாள்”, அடுத்த மாதம் 2ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள “காடன்” மற்றும் அனுஷ்கா - மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள “சைலன்ஸ்” உள்ளிட்ட படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  இதனால் கோலிவுட்டிற்கு மட்டும் 150 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.