Asianet News TamilAsianet News Tamil

கொரோனா கட்டுப்பாடு... திரையரங்கங்கள் எடுத்த அதிரடி முடிவு..! திருப்பூர் சுப்ரமணியன் தகவல்..!

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில், இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது. எனவே இனி, காலை, மாலை, இரவு என மூன்று முறை மட்டுமே படங்கள் திரையரங்குகளில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
 
Corona restrictions Action taken by theaters Tirupur Subramanian information
Author
Chennai, First Published Apr 20, 2021, 4:50 PM IST

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில், இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது. எனவே இனி, காலை, மாலை, இரவு என மூன்று முறை மட்டுமே படங்கள் திரையரங்குகளில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, கொரோனா வேகமாக பரவி வருவதால்... திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்க பட்டு வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகளும் போடப்பட்டுள்ளது. இரவு நேர  ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வர உள்ளதால், திரையரங்குகளில் படம் திரையிடப்படும் நேரம் மாற்ற பட்டு, இரவு காட்சியை 8 மணிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

Corona restrictions Action taken by theaters Tirupur Subramanian information

மேலும், புதிய ஆட்சி அமைந்தவுடன் திரையரங்குகளுக்கான புதிய கோரிக்கைகள் கேட்கப்படும் என தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்

ஏற்கனவே... கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தியாவில் தன்னுடைய கொடூர முகத்தை காட்ட துவங்கிய கொரோனாவால், சுமார் 8 மதத்திற்கு மேலாக அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டு இருந்தது. பின்னர் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்கினாலும், கொரோனா அச்சம் காரணமாக பலர், திரைப்படம் பார்க்க திரையரங்குகளுக்கு வரவில்லை. மாஸ்டர் படம், பொங்கலை முன்னிட்டு 50 சதவீத பார்வையாளர்களுடன் வெளியானாலும், பின்னர் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.

Corona restrictions Action taken by theaters Tirupur Subramanian information

எனவே மீதும், திரைப்படங்களை தயாரிப்பாளர்கள் திரையிட தயாரான நிலையில், கொரோனாவின் இடண்டாவது அலை மக்களை வாட்டி வதக்கி வருவதால், மீண்டும் மத்திய மற்றும் மாநில அரசுகள் சில கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது இரவு நேர 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இரவு நேர ஷோ திரையரங்குகளில் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios