உலக நாடுகளை கடந்து, இந்தியாவிற்குள் புகுந்து அனைவருக்கும் உயிர் பயத்தை காட்டி வருகிறது கொரோனா தொற்று. இந்த கொடூர வைரஸை முடிந்த வரை, விரைவாக இந்தியாவை விட்டு வெளியேற்ற, மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகிறது. இவர்களுக்கு உறுதுணையாக, மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் என  உயிரை பணயம் வைத்து பலர் வேலை செய்து வருகிறார்கள்.

ஆனால், மெல்ல மெல்ல இதன் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கொரோனா பிரச்சனை காரணமாக, சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த சில பிரபலங்களும் கடுமையாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஏற்கனவே சில பிரபலங்கள், பழ வியாபாரம், காய்கறி வியாபாரம் போன்ற தொழில்களை செய்து வந்த நிலையில், தற்போது ஒரு நடிகர் மீன் விற்க துவங்கியுள்ளார். 

தனஹா (Thanaha) உள்ளிட்ட பல மலையாள படங்களில், சிறு சிறு குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர் சுதீஷ் அன்சேரி. இவர் ஒரு தனியார் பள்ளியில், ஓவிய ஆசிரியராகவும், மிமிக்கிரி மற்றும் நாட்டுப்புற பாடல் கலைஞராகவும் இருந்தார்.

ஆனால் தற்போது, இவரின் அணைத்து பணிகளும் கொரோனா தொற்று காரணமாக முடங்கியதால், இவர் மீன் விற்பனை செய்ய துவங்கியுள்ளார். இவரின் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது