நடிகர் விக்ரம் 'கடாரம் கொண்டான்' படத்தை தொடர்ந்து, தன்னுடைய மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமான, 'ஆத்யா வர்மா' படத்தின் அதிக கவனம் செலுத்தி வந்தார். தற்போது  நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'கோப்ரா' படத்தில் நடித்து வருகிறார். 

விக்ரமின் 58 ஆவது படமாக உருவாகும் இந்த படத்தை 7 க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

விக்ரமுக்கு ஜோடியாக, கே.ஜி.எப் படத்தில் நடித்த நடிகை ஸ்ரீநிதி நடிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குறிப்பாக இப்படத்தில் விக்ரம், மொத்தம் 12 வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானபோது, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Scroll to load tweet…

இயக்குனர் அஜய் ஞானமுத்து இதுகுறித்த தகவலை சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். அதன்படி, 28 ஆம் தேதி, அதாவது நாளை மறுநாள் 5 மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.