Cool Suresh who is said to be the heroine has begun to question the people when they are going to take the film.

பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது உலகம் அறிந்த உண்மை. நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பொது ஓவரா கூவன ஜூலியானா என்ற பெண்ணும் ஒருவர் என்பது நமக்கு தெரியும்.

நல்லதோ கெட்டதோ, கருப்போ சிவப்போ எப்படியோ மக்கள் மத்தியில் ஏதோ ஒரு மூலையில் இடம் பிடித்த ஜூலிக்கு திரைப்பட வாய்ப்பு காத்திருக்கு. அதாவது “கோழி கருப்பா இருந்தா என்ன ..சிவப்பா இருந்தா என்ன? நமக்கு தேவை குர்மா” என்ற பாணியில், ஹன்சிகாவையும் நயன் தாராவையும் விட அதிவேகமாக பிரபலமான ஜூலி தான் என்பட ஹீரோயின்னு, தவமிருக்கிறார் நடிகரும் தயாரிப்பாளருமான கூல் சுரேஷ்.

ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளிவந்தவுடன், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி, கதாநாயகியாக அறிமுகம் செய்ய உள்ளதாக சொன்ன கூல் சுரேஷ், ஜூலியை வைத்து எப்போது படம் எடுப்பார்ன்னு மக்கள் கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர்.

இதுலஎன்ன ஒரு சுவாரசியம்னா, தயாரிப்பாளர் கூல் சுரேஷ்க்கு, இதுதான் முதல்படமாம்......