5 மொழிகளில் தயாராகும் 'குக் வித் கோமாளி'..! இந்த புரோமோவை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், அனைத்து நிகழ்ச்சிகளுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக, அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், அனைத்து நிகழ்ச்சிகளுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக, அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி.
மேலும் செய்திகள்: இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவில் திடீர் சந்திப்பு! விவேக் வேண்டுகோளை ஏற்ற இசைஞானி!
முதல் சீசன் சுமாரான வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பிரபலங்களுக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவும் துவங்கிவிட்டது. இந்நிலையில் தற்போது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியை ஐந்து மொழிகளில் ஒளிபரப்ப ஸ்டார் டிவி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன் முன்னோட்டமாக தற்போது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி 'குக் வித் கிறுக்கு' என்ற டைட்டிலுடன் கன்னடத்தில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள குக்குகள் மற்றும் கோமாளிகளை தேர்வு செய்வதில் நிகழ்ச்சியாளர்கள் தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படும்.
மேலும் செய்திகள்: குண்டாய் கொழுக், மொழுக்குன்னு மாறிய 'சூரரை போற்று' அபர்ணா..! சேலையில் சிறகடித்த புகைப்படங்கள்..!
இந்த தகவலை உறுதி செய்வது போல், 'குக் வித் கிறுக்கு' முதல் புரோமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கன்னடத்தை தொடர்ந்து விரைவில் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி எடுக்கப்பட உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியை விட மிகக் குறைந்த செலவில் எடுக்கப்படும் இந்த நிகழ்ச்சிக்கு பிக்பாஸுக்கு நிகராக பார்வையாளர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.