இன்று முதல் துவங்கவுள்ள குக் வித் கோமாளி 3-ல் போட்டியாளரும் பிரபல நடிகையுமான வித்யுலேகா சமீபத்தில் கொரோனவால் பாதிக்கப்படுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதிக பார்வையாளர்களைக் கடந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி உள்ளது. பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில் பலருக்கும் ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர் நிகழ்ச்சியாக உள்ளதால் இதற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதல் சீசனில் வனிதா, ரம்யா பாண்டியன், உமா ரியாஸ், ரேகா, உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். இதில் வனிதா முதல் பரிசை வென்றார். அதேபோல் இரண்டாவது சீசனில் ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக களமிறங்கினர். இதில் கனி இறுதிப்போட்டியில் வென்றார்.

இந்நிகழ்ச்சியின், சிறப்பம்சம் என்னவென்றால், அது கோமாளிகள் தான், அதன்படி புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, சக்தி ஆகியோர் கோமாளிகளாக இரண்டு சீசன்களிலும் கலக்கினர். 

வெற்றிகரமாக இரண்டு சீசன்கள் முடிந்துள்ள நிலையில், தற்போது 3-வது சீசனுக்கான அறிவிப்பு வந்தாச்சு. இதற்கான மாஸான புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புரோமோவில் செப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் உடன் கோமாளிகளான மணிமேகலை, சிவாங்கி, பாலா, சுனிதா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். 

இந்த சீசன் 3-ல் அம்மு அபிராமி, அந்தோணி தாசன், தர்ஷன், கிரேஸ் கருணாஸ், மனோபாலா மகாதேவன், ரோஷ்னி ஹரிப்ரியன், சந்தோஷ் பிரதாப், ஸ்ருத்திகா அர்ஜுன், வித்யுல்லேகா ராமன் உள்ளிட்ட 9 போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதற்கான ப்ரோமோவும் படு விறுவிறுப்பாக வைரலாகி வருகிறது.

View post on Instagram

இந்நிலையில் ஜில்லா, புலி, வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த பிரபல நடிகையான வித்யுலேகா தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.