நீங்க நினைக்கிறமாதிரி இல்லை என ஒரு ட்விட்டர் பதிவில் ஒரு பெண்ணுடன் திருமணக் கோலத்தில் நிற்கிறார் புகழ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தினை எச்.வினோத் இயக்கி வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டு வருட காத்திருப்புக்கு ஏற்ற தரமான சம்பவமாக இந்த போஸ்டர்கள் வெளியாகின. இந்த படத்தில் தல அஜித்துடன் இணைந்து விஜய் டிவி புகழ் நடித்துள்ளது போனி கபூர் பதிவால் உறுதியாகி உள்ளது. வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டரை வெளியிட்டுள்ள அவர் விஜய் டிவி புகழுக்கும் டேக் செய்துள்ளார். இதனால் வலிமை படத்தில் புகழ் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் நீங்க நினைக்கிறமாதிரி இல்லை என ஒரு ட்விட்டர் பதிவில் ஒரு பெண்ணுடன் திருமணக் கோலத்தில் நிற்கிறார் புகழ். அதில் புதிய படத்தின் பூஜை என பதிவிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ட்விட்டர் ஐடி புகழ் உடையது இல்லை என கூறப்படுகிறது. @pugazh_iam இந்த ட்விட்டர் ஐடியை 99.8 ஆயிரம் பேர் தொடர்ந்து வருகிறனர். ஆனால் புகழின் உண்மையான ட்விட்டர் ஐடி @VijaytvpugazhO இது. இந்த ஐடியை 38.1 ஆயிரம் பேர் மட்டுமே தொடர்ந்து வருகின்றனர். ஆக, உண்மையைவிட போலிக்கே அதிக மதிப்பு என்பது அவரது ட்விட்டர் ஐடிக்கும், ஷூட்டிங் கல்யாண போட்டோவுக்கும் சாலப் பொருந்துகிறது.