Ashwin kumar : குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் கதைகேட்டு தூங்கிய விஷயத்தை விமர்சித்து காமெடி சீனாக தனது வெப் தொடரில் வைத்த இயக்குனரை அஸ்வின் கடுமையாக சாடியுள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பேமஸ் ஆனவர் அஸ்வின் குமார். இந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டமும் உருவானது. இதனால் அவருக்கு பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கியது. அந்த வகையில் அவர் முதலாவதாக நடித்த படம் ‘என்ன சொல்ல போகிறாய்’. அஸ்வினுக்கு இருக்கும் பாப்புலாரிட்டியை நம்பி இப்படத்தை பிரம்மாண்டமாக எடுத்தனர்.

ஆனால் இப்படம் படுதோல்வியை சந்தித்தது மட்டுமின்றி அஸ்வினின் கெரியரையும் தலைகீழாக புரட்டிப்போட்டது. இதற்கு காரணம் இப்படத்தின் ஆடியோ லாஞ்சில் பேசிய அஸ்வின், அப்போது தான் 40 இயக்குனர்களிடம் கதை கேட்டு தூங்கி இருப்பதாக பேசினார். அஸ்வினின் இந்த ஆணவப் பேச்சு அவருக்கு பெரும் ஆப்பாக மாறியது.

இதன்பின் அவரை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்யத் தொடங்கினர். திரையுலகினர் பலரும் அஸ்வினின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி அஸ்வினுக்கு ஸ்லீப்பிங் ஸ்டார் என்ற பட்டமும் கொடுத்தனர். இத்தகைய கடுமையான விமர்சனங்களால் மிகவும் அப்செட்டான அஸ்வின், அதிலிருந்து படிப்படியாக மீண்டு வருகிறார்.

இதையும் படியுங்கள்... தமிழ் சினிமாவின் பெருமை பொன்னியின் செல்வனை பாராட்டி தள்ளிய சூர்யா..சிம்பு

Scroll to load tweet…

இந்நிலையில், சமீபத்தில் அறிவழகன் இயக்கத்தில் வெளியான தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸில் அஸ்வினை கிண்டலடிக்கும் விதமாக ஒரு காட்சி இடம்பெற்று இருக்கும். அதில், தன் மகனுக்கு சினிமா சான்ஸ் கேட்பதற்காக ஒருவர் தனது மகனின் போட்டோவை காட்டி, “சார் இவன் பேரு அஸ்வின் குமார், அவனே ஏகே-னு சொல்லிகிடுவான். போட்டோல பார்த்தா தூங்குன மாதிரிதான் இருப்பான். ஆனா நேர்ல நல்லா இருப்பான்” என்று வசனம் பேசியிருப்பார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் என்ன அஸ்வினை இப்படி நேரடியாக தாக்கி பேசிருக்காங்களே என அந்த வீடியோவை வைரலாக்கி வந்தனர். தற்போது அந்த வீடியோவை பார்த்து கடுப்பான அஸ்வின் இயக்குனர் அறிவழகனை கடுமையாக விமர்சித்துள்ளார். தாங்கள் பிரைன் பியூட்டி (அறிவழகன்) கிடையாது, பிரைன் லெஸ் பியூட்டி (அறிவில்லாதவன்) என்று நிரூபித்திருக்கிறீர்கள். சாரு ரிவியூஸ் பாத்திருப்பாருன்னு நம்புறேன். புரிஞ்சவன் பிஸ்தா” என மறைமுகமாக தாக்கி பதிவிட்டுள்ளார். அஸ்வினின் இந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்... பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை யார்..? என்ன செய்கிறார்... தற்கொலைக்கு என்ன காரணம்?