விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி' சீசன் 2 போட்டியாளர் அஷ்வின் ஹீரோவாக நடிக்கும் படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்ட நிலையில், இன்று முதல் ஷூட்டிங் துவங்கியது.  

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி' சீசன் 2 போட்டியாளர் அஷ்வின் ஹீரோவாக நடிக்கும் படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்ட நிலையில், இன்று முதல் ஷூட்டிங் துவங்கியது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

விஜய் டிவியில் எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், அது அவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல ஏதுவாக அமைகிறது. அந்த வகையில், விஜய் டிவியில் தொகுப்பாளராகவும், சீரியல் நடிகர்களாகவும் இருந்தவர்கள், அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றி தங்களுடைய நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்து இன்று முன்னணி நடிகர், நடிகைகளாக உள்ளனர்.

அந்த வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நிகராக விஜய் டிவி ரசிகர்களை கவர்ந்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது 'குக் வித் கோமாளி' சீசன் 2 தான். முதல் சீசனை விட இரண்டாவது சீசனுக்கு வேற லெவல் வரவேற்ப்பு இருந்தது. இதில் கலந்து கொண்ட குக்குகள் முதல்... கோமாளிகள் வரை... அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட் ஆகி வந்தனர். அந்த வகையில் ஏற்கனவே, அஷ்வின் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதில் இருந்து திடீர் என விலகினார்.

இதை தொடர்ந்து சமீபத்தில் அறிமுக இயக்குனர் ஒருவர் படத்தில் அஷ்வின் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்ட நிலையில், இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த படத்தில் அஷ்வினுடன் குக் வித் கோமாளி புகழும் இணைந்து நடிக்கிறார். 'என்ன சொல்ல போகிறாய்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை, அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்குகிறார். ரவீந்திரன் படத்தை தயாரிக்கிறார்.