பத்தல பத்தல பாடலை டிட்டோவாக பாடிய திருமூர்த்தி..நேரில் வாழ்த்திய கமல்!
பத்தல பத்தல பாடலை அப்படியே பாடிய பார்வை மாற்றுத்திறனாளி திருமூர்த்தியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன் திருமூர்த்தி இசை கற்றுக்கொள்வதற்கான முழுச்செலவையும் ஏற்று கொள்வதாக கூறியுள்ளார்.
கமல்ஹாசன், ஃபஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி மாஸ் காட்டிய திரைப்படமான விக்ரம் படம் வெளியாகும் முன்னர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் சிங்கிள் மே 11 அன்று வெளியிடப்பட்டது. இந்த படத்தை மாஸ்டர் புகழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மேலும் ராஜ் கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. 'பாதலா பாதலா', ஒரு வேடிக்கை நிறைந்த பாடல், நடிகரின் முந்தைய பாடல்களான 'கந்தசாமி மாடசாமி' மற்றும் 'ஆழ்வார்பேட்டை ஆண்டவா' போன்றவற்றை நினைவூட்டது. . படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். 'அன்பே சிவம்' உட்பட பல பிரபலமான பாடல்களை கமல் பாடியுள்ளார்.
லிரிக்கல் வீடியோவாக வெளியான இந்த பாடல் பல எதிர்ப்புகளை சந்தித்த போதிலும் ஹிட் அடித்தது. இதில் கமல் குத்தாட்டம் போட்டிருந்தார்.. அத்துடன் இப்பாடலின் சில வரிகள் சர்ச்சையையும் கிளப்பியது.குறிப்பாக “ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்லே இப்பாலே” எனும் வரிகள் மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் அமைந்து இருப்பதாகக் கூறி அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை வெடித்துள்ளது. அதோடு மதம் சார்ந்த வார்த்தைகளும் இடம் பெற்றதாக கண்டனம் எழுந்தது.5,000 க்கும் மேற்பட்ட பார்வைகளையும் 4,000 லைக்குகளையும் பெற்றுள்ளது.
இதையடுத்து இந்த பாடகர் குறித்த தகவலை அறிந்த கமல் பத்தல பத்தல பாடலை அப்படியே பாடி பார்வை மாற்றுத்திறனாளி திருமூர்த்தி நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார். அதோடு அவரது இசை கற்றுக்கொள்வதற்கான முழுச்செலவையும் ஏற்று கொண்டார். கமலின் முன்னிலையில் பிளாஸ்டிக் பாக்கெட்டில் தளம் போட்டபடி பாடி அசத்தியுள்ளார் திருமூர்த்தி.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் ஜூன் 3 அன்று திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 375 கோடிகளை கடந்துள்ளது. தற்போது விரைவில் 400 கோடியை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.