Congratulations to comrede Jignesh Mawani for victory in Gujarat elections - ranjith
குஜராத் சட்டசபை தேர்தலில் சுயேட்சையாக நின்று வெற்றிப் பெற்ற தலித் வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானிக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.
குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் வத்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு அபார வெற்றிப் பெற்று பாஜகவை கதிகலங்க வைத்தவர் ஜிக்னேஷ் மேவானி.
இவருக்கு தமிழ்த் திரையுலக இயக்குநர் பா.இரஞ்ஜித் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தின் வட்காம் தனித் தொகுதியில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 90,375 வாக்குகள் பெற்று காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெற்றது. இங்கு போட்டியிடப் போவதாக ஜிக்னேஷ் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, போட்டியிடாமல் விலகிக் கொள்வதாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் அறிவித்தன.
பா.ஜ.க-வின் சார்பில் போட்டியிட்ட விஜய் சக்கரவர்த்திக்கும், ஜிக்னேஸுக்கும்தான் இங்கு போட்டி நிலவியது. இந்த நிலையில், ஜிக்னேஸுக்கு 63,471 வாக்குகள் எடுத்தார். பா.ஜ.க வேட்பாளருக்கு 42,429 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.
இதுகுறித்து பா.இரஞ்ஜித் தனது முகநூல் பக்கத்தில், "உங்களின் வெற்றி அதிக மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றி இன்னும் உறுதியுடன் பாஸிச அரசியலை எதிர்த்து போராட உதவும் தோழர்" என்று அவர் பாராட்டியுள்ளார்.
