Asianet News TamilAsianet News Tamil

புதிய அவதாரம் எடுக்கும் அனிருத்! வி.எஸ். மணி & கோ பில்டர் காஃபி நிறுவனத்தில் முக்கிய பதவி!

அனிருத் மணி அன்ட் கோ நிறுவனத்தின் இணை- நிறுவனராகவும் பிராண்ட் அம்பாசிடராகவும் பணியாற்றுவார். இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் இசை நிகழ்ச்சிகள் மூலமாகவும் தென்னிந்திய வாடிக்கையாளர்களை கவர இலக்கு வைத்துள்ளது.

Composer Anirudh Ravichander joins filter coffee startup VS Mani & co as co-founder sgb
Author
First Published Jun 12, 2024, 6:50 PM IST

இந்தியன் 2 உட்பட பல பெரிய படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத் ரவிச்சந்தர் இப்போது சினிமாவில் மட்டும் இல்லாமல் தொழில் துறையிலும் முத்திரை பதிக்கத் தயார் ஆகிவிட்டார். இதற்காக பிரபல நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்துள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் நண்பரும், நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் ஷிவன் நடத்திவரும் டிவைன் புட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தார். இப்போது மற்றறொரு நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளார். வி.எஸ். மணி & கோ என்ற ஃபில்டர் காபி ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் அனிருத் இணைந்துள்ளார்.

அனிருத் மணி அன்ட் கோ நிறுவனத்தின் இணை- நிறுவனராகவும் பிராண்ட் அம்பாசிடராகவும் பணியாற்றுவார். இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் இசை நிகழ்ச்சிகள் மூலமாகவும் தென்னிந்திய வாடிக்கையாளர்களை கவர இலக்கு வைத்துள்ளது.

பாரம்பரிய முறையில் ஃபில்டர் காபி தயாரிக்க அதிகம் நேரம் எடுக்கும் நிலையில், அதே சுவையில் விரைவாக ஃபில்டர் காபியை தயாரித்து வழங்குவதாக மணி அன்ட் கோ சொல்கிறது. இந்த நிறுவனம் 27 முதல் 40 வயது வரை உள்ள இளைய தலைமுறையைக் குறிவைத்து இந்தத் தொழிலில் இறங்கியுள்ளது.

சமீபத்தில் நடந்த ஷார்க் டேங்க் நிகழ்ச்சியில் பங்கேற்ற வி.எஸ். மணி & கோ நிறுவனம் நாடு முழுவதும் கவனம் பெற்றது. இந்த நிறுவனம் ஜி.டி. பிரசாத், யஷாஸ் அலூர் மற்றும் ராகுல் பஜாஜ் ஆகியோரால் தொடங்கப்பட்டது. காபியுடன் ஸ்னாக்ஸ் வகைகளையும் விற்பனை செய்கிறது.

ஹால்திராம்ஸ் போன்ற பிராண்டாக உருவெடுக்க வேண்டும் என திட்டம் போட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த நிறுவனத்தின் மொத்த வருவாயில் 60 சதவீதம் மூலமாகவும், 40 சதவீதம் கடைகள் மூலமாகவும் வருகிறது.

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் சமீபத்தில் தான் தமிழ்நாடு, கர்நாடகா இரு மாநிலங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளுடன் இணைந்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய ஆரம்பித்துள்ளது. வேறு சில நிறுவனங்களும் இந்த நிறுவனத்தில் பங்களித்துள்ளன.

அனிருத் மட்டுமின்றி, ரானா டகுபாட்டி, ரன்பீர் கபூர், ஹுமா குரேஷி என பல பிரபலங்களும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். ஆனால் இவர்கள் எல்லாம் எவ்வளவு தொகையை முதலீடு செய்துள்ளார் என்ற விவரம் வெளிவரவில்லை.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios