Complete shooting for the 2.0 Team ...

ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நேற்றோடு முடித்தது ரஜினியின் ‘2.0’ டீம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் படம் ‘2.0’.

இந்த படத்திற்காக படக்குழுவினர் அனைவரும் கடந்த இரண்டரை வருடங்களாக உழைத்து வருகின்றனர்.

ரஜினிக்கு இணையாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடிக்கிறார்.

இந்தப் படம், அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகவுள்ளது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏற்கெனவே முடிக்கப்பட்டு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி இருந்தது. கடந்த 10 நாட்களாக ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில் அந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் அதுவும் முடிவுக்கு வந்ததையடுத்து, படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நேற்றொடு முடித்துவிட்டது 2.0 டீம்.