Asianet News TamilAsianet News Tamil

‘திமிரு புடிச்சவனை ஏதாவது ’செய்’ங்க... 16 ம் தேதிக்காக நடக்கும் 18 பஞ்சாயத்துகள்...

சிறு,குறும்பட்ஜெட் படங்களை நெறிப்படுத்துவதற்காக தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் எப்போதுமே கடுமையான அயர்ச்சியில் வந்துதான் முடிகின்றன. அட்லீஸ்ட் 60 தியேட்டராவது குடுங்க என்றபடி தயாரிப்பாளர் சங்கத்தில் 6 மாதம் வரை கூட காத்திருக்கும் சிறு படத்தயாரிப்பாளர்களில் பலருக்கும் கடைசியில் சாத்தப்படுவது பட்டை நாமம்தான்.

competion between 5 films for november 16th release
Author
Chennai, First Published Nov 11, 2018, 3:43 PM IST


சிறு,குறும்பட்ஜெட் படங்களை நெறிப்படுத்துவதற்காக தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் எப்போதுமே கடுமையான அயர்ச்சியில் வந்துதான் முடிகின்றன. அட்லீஸ்ட் 60 தியேட்டராவது குடுங்க என்றபடி தயாரிப்பாளர் சங்கத்தில் 6 மாதம் வரை கூட காத்திருக்கும் சிறு படத்தயாரிப்பாளர்களில் பலருக்கும் கடைசியில் சாத்தப்படுவது பட்டை நாமம்தான்.competion between 5 films for november 16th release

இதன் பழைய பஞ்சாயத்துகள் பயங்கர போரடிக்கும் என்பதால் வரும் பதினாறாம் தேதி ரிலீஸுக்கு நடந்துவரும் பதினெட்டுப்பட்டி பஞ்சாயத்தை மட்டும் பார்ப்போம்.

தீபாவளிக்கு ரிலீஸாவதாக இருந்து,  ‘சர்கார்’ கொடுத்த தியேட்டர் நெருக்கடியால் பின் வாங்கிய விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’, தன் படம் கலெக்‌ஷனில் எதையும் செய்’து விடாதபடி படங்களை கவனமாக செலக்ட் பண்ணும் நடிகர் நகுலின் ‘செய்’,பெரிய இடத்து மருமகள் ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’, ‘உலா’ என்ற பெயரில் ஒரு வருடமாக ரிலீஸாகாமல் உலா வந்து பெயர் மாற்றம் பெற்ற ‘சித்திரம் பேசுதடி2’, ஃப்ளாப் படங்கள் மட்டுமே தருவதற்கு நேர்ந்து விடப்பட்ட உதயாவின் ‘உத்தரவு மகாராஜா’ ஆகிய படங்கள் இந்த 16ம் தேதியே ரிலீஸாவதே தீருவது என்று வெறிகொண்டு காத்திருக்கின்றன.competion between 5 films for november 16th release

இந்த சூழ்நிலையில், கடந்த ஒருவாரகாலமாக நடந்த பெரும் கட்டப்பஞ்சாயத்துகளின் முடிவில், நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில், 16ம் தேதிக்கான  ரிலீஸ் பட்டியலில் திடீரென்று ‘திமிரு புடிச்சவன்’ படத்தை  நீக்கி மற்ற 4 படங்களை ரிலீஸ் செய்ய மட்டுமே தயாரிப்பாளர் சங்கம் அனுமதித்திருக்கிறது. competion between 5 films for november 16th release

ஆனால் விஜய் ஆண்டனி பிடிவாதமாக, ‘இன்றுவரை விளம்பரம் செய்துகொண்டிருக்கிறேன். நாங்களும் எத்தனை முறை ரிலீஸை ஒத்திப்போடுவது என்று கொந்தளிக்கிறார். என்ன காரணத்தாலோ விஜய் ஆண்டனி படம் தள்ளிப்போடப்பட்டதில் மற்ற போட்டியாளர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் இருப்பதை அவர்களது ட்விட்டர் பதிவுகளில் காணமுடிகிறது. அடுத்த மூன்று நாட்களுக்கு இந்த 5 படங்களின் ட்விட்டர் பஞ்சாயத்து களைகட்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios