இந்தாண்டு எனக்கு திருமணம் நடைபெறும் பெண் பார்த்துக்கொடிருக்கிறார்கள் என்றெல்லாம் கப்சா விட்ட யோகி பாபு திருமணம் ரகசியமாக உறவினர்கள் மத்தியில் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் இன்று நடந்து முடிந்திருகிறது.

 நடிகர் யோகிபாபு திருமணம் இன்று காலை நடந்தது. மணமகள் பெயர் மஞ்சு பார்கவி. யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து இந்த திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர். மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் 2009-ம் ஆண்டு வெளிவந்த யோகி திரைப்படத்தில் அறிமுகமாயிருந்தலும், 2014-ம் ஆண்டு வெளிவந்த யாமிருக்க பயமேன் திரைப்படத்திற்கு பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார். தற்போது இவருக்கு படவாய்ப்புகள் வந்து குவிகின்றன.  தற்போதைய நிலையில் பிசி நடிகராக இருப்பவர் யோகிபாபு. அவர் கால்ஷீட்டுக்காக முன்னணி ஹீரோக்கள் கூட காத்திருக்க வேண்டிய நிலை.

அவர் நடிக்காத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் காமெடி நடிகர் யோகி பாபுவுக்கு திருமணம் முடிவாகியுள்ளதாக தகவல் வெளியானது. கடந்த சில மாதங்களாகவே யோகி பாபுவுக்கு திருமணம் என அடிக்கடி தகவல் பரவியது. கடந்த சில மாதங்களுக்கு முன் துணை நடிகை ஒருவருடன் யோகி பாபு இருக்கும் போட்டோ வைரலானது. ஆனால் போட்டோவில் இருக்கும் பெண்ணுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று யோகி பாபு விளக்கம் அளித்திருந்தார்.

சம்பந்தப்பட்ட அந்தப் பெண் ஒரு துணை நடிகை. அவர், ஒரு படத்தின் ஷூட்டிங்கில் யோகி பாபுவுடன் அந்த செல்பியை எடுத்ததாகத் தெரிவித்ததால் பிரச்னை முடிந்தது. இந்நிலையில் அவருக்குத் திருமணம் நிச்சயமாகியிருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியானது. இதனை நடிகர் யோகி பாபு உறுதி செய்ததாகவும், இது பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணம் என்றும் அவர் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாயின. 

 

 நடிகர் யோகி பாபு திருமணம் 5 ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் எளிமையான முறையில் நடைபெறவுள்ளதாகவும் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இதில் பங்கேற்பார்கள் என்றும் அதற்காக ஏற்பாடுகளை இரண்டு குடும்பத்தினரும் செய்து வருவதாகக் கூறப்பட்டது.

 சினிமா பிரபலங்கள்  யோகிபாபு தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள். வாழ்த்துக்கள் யோகிபாபு தம்பதியரே..!!

TBalamurukan