தமிழ் சினிமாவில் தற்போது தன்னுடைய, கலகலப்பான காமெடி பேச்சால் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வருபவர் காமெடி நடிகர் யோகிபாபு. மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டார். 

மிகவும் கஷ்டப்பட்டு, திரைப்பட வாய்ப்பை பெற்ற இவர், முன்னணி நடிகர்கள் படங்களில் வரிசையாக கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்த வருடம் மட்டும் இவர் கையில் அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது.

சமீபத்தில், கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஒரு பிரமாண்டமான வீட்டை கட்டி, கிரஹ பிரவேசம் செய்து முடித்தார். இதை தொடர்ந்து தற்போது இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து விட்டார்களாம். இதற்காக தீவிரமாக பெண் தேடும் வேலையும் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அண்மையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,  திருமணம் நடக்கும் போது கண்டிப்பாக அனைவரிடமும் சொல்வேன். என் அம்மா பெண் பார்த்து வருகிறார். அதற்காக தான் வீட்டிற்கு வந்துள்ளார். என தன்னுடைய திருமணம் குறித்து முதல் முறையாக பகிர்ந்துள்ளார் யோகிபாபு. இதற்க்கு இப்போதே பல ரசிகர்கள் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிக்க துவங்கிவிட்டனர்.