சமீப காலங்களாக வெள்ளித்திரை நடிகர்களுக்கு நிகராக பார்க்கப்படுகிறார்கள் சின்னத்திரை நடிகர்கள்.
சமீப காலங்களாக வெள்ளித்திரை நடிகர்களுக்கு நிகராக பார்க்கப்படுகிறார்கள் சின்னத்திரை நடிகர்கள். மேலும் சின்னத்திரையில் பிரபலமாகி இன்று பலர் தொடர்ந்து வெள்ளித்திரையில் ஜொலிக்க துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஏற்கனவே நடிகர் கமல், ஆர்யா, உள்ளிட்ட பிரபலங்கள் சின்னத்திரைக்கு வந்துள்ள நிலையில், தற்போது நடிகர் சூரியும் சின்னத்திரைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் 'திருமணம்' என்கிற தொடர் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் நடைபெறும் திருமணம் ஒன்றில், கலந்து கொண்டு மனமக்களுடன் செல்பி எடுத்துக்கொள்ளுவது போன்ற காட்சியில் நடிக்கிறாராம் சூரி.

இதுகுறித்து இந்த தொடரை இயக்கி வரும் இயக்குனர் கூறுகையில், இந்த சீரியலில் அவரை நடிக்க வைக்க தயக்கத்தோடு தான் அணுகியதாகவும், ஆனால் இது குறித்து நான் சொன்னதும் எந்த தயக்கமும் இன்றி சூரி உடனடியாக இந்த காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
