comedy actor shanker win the badminton gamee
தல அஜித் உள்பட பல நடிகர் நடிகைகள் நடிப்பையும் மீறி, தங்களுக்கு பிடித்த விளையாட்டில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது கருணாசுடன், அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் காமெடி நடிகராக நடித்தவர் ஷன்கர்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு பாட்மிண்டன் விளையாட்டு வீரர். சமீபத்தில் நடந்த பாரா பாட்மிண்டன் போட்டியில் கலந்துகொண்டு விளையாடிய இவர் அந்தப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.\

இவர் சாதாரண மனிதர்களை விட சற்று உயரம் குறைவாக உள்ளதால் பாரா பாட்மிண்டன் போட்டியில் கலந்துக்கொண்டு தங்கப் பதக்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்கள் மற்றும் இன்றி இவர் ஒரு சில சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஷங்கருக்கு ஏசியா நெட்டின் வாழ்த்துக்கள்...!
