comedy actor sentil birthday
தமிழ் சினிமாவில் காமெடிக்கு என்று தனி அடையாளம் பதித்தவர்களில் முக்கியமானவர் காமெடி நடிகர் செந்தில்.
இவர் கவுண்டமணியுடன் இணைத்து நடித்த படங்களில் வரும் காமெடி காட்சிகளை இன்றைய தலைமுறை ரசிகர்களும் ரசித்து சிரித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
இவர் ஆரம்பித்த சொப்பனசுந்தரி காமெடி இன்றுவரை ட்ரெண்டில் இருந்து வருகிறதது. அதே போல் ஒரே ஒரு வாழைப்பழத்தை வைத்தே காமெடி செய்தவர் என்ற பெருமையும் இவரை தான் சேரும்.
கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற இந்த வாழைப்பழ காமெடியை இன்று கூட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டால் குடும்பத்தோடு சிரித்து மகிழ்வது உண்டு.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் செந்தில், விக்னேஷ்சிவன் இயக்கத்தில் தயாராகிவரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யா, கீர்த்திசுரேஷுடன் இணைத்து நடித்து வருகிறார்.
நேற்று அவருடைய பிறந்த நாள் படப்பிடிப்பு தளத்தில்கொண்டாடப்பது இதனால் படக்குழுவினர் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இரண்டு வாழைப்பழங்கள் வடிவில் ஒரு கேக்கை தயார் செய்து அவருடைய பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்.
ஒரு சீனியர் நகைச்சுவை நடிகரின் பிறந்த நாளை இளம் நடிகர்கள் இணைந்து வித்தியாசமாக கொண்டாடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. மேலும் இந்த வாழைப்பழ கேக் ஐடியாவை கொடுத்தது சூர்யா தானாம்.
