சமீபகாலமாக ஃபேஸ்புக் ஆப்புகள் மூலம் பல்வேறு கெட் அப்புகளுக்கு மாறிக்கொண்டு சக மனிதர்களை சகலரும் டார்ச்சர் பண்ண ஆரம்பித்திருக்கும் நிலையில் பிரபல காமெடி நடிகர் சதீஷ் பெண்ணாக மாறி அதிர்ச்சி அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ' FaceApp' என்ற செயலி வைரலாகி வருகிறது. இதன் மூலம் ஒரிஜினல் தோற்றத்தை நாம் விரும்பும் வயதிற்கும், தோற்றத்திற்கும் மாற்றி கொள்ள முடியும். இந்த ஆப்பை பயன்படுத்தி பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். கிரிக்கெட் வீரர் டோனி உட்பட அத்தனை வீரர்களின் வயதான தோற்றங்களும் கடந்த சில தினங்களாக வலம் வந்தன.

இந்நிலையில், இந்த ஆப்  மூலம் தன்னை அழகான  பெண்ணாக மாற்றியுள்ளார் காமெடி நடிகர் சதீஷ், இதுதொடர்பான புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் அவர் பதிவேற்றியுள்ளார். சும்மா சொ, ஆண் தோற்றத்தில் தான் சுமாராக இருக்கிறாரே ஒழிய பெண் தோற்றத்தில் சூப்பர் ஃபிகராகவே காட்சி அளிக்கிறார் சதீஷ்.