comedy actor mayil samy emotional speech

அண்மைக் காலமாகவே, நடிகர் மயில்சாமி அரசியல் குறித்து அவ்வப்போது சில விமர்சனங்களை தெரிவித்து வருகிறார். இதனால் இவர் குறித்து சில கிசுகிசுக்களும் வெளிவருதுண்டு. சில நாட்களுக்கு முன்புகூட இவர் ஒரு கட்சி துவங்க உள்ளதாக கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து தற்போது இவர் திடீர் என திமுக., தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். 

இந்த சந்திப்பு குறித்து நகைச்சுவை நடிகர் மயில் சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் எம்.ஜி.ஆரின் தீவிர பக்தன். இன்று நான் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கக் காரணம்... 'எங்கள் தங்கம்' என்கிற எம்.ஜி.ஆர் படத்தைப் பார்க்கும் போது எம்.ஜி.ஆர் முகத்தில் கலைஞரைப் பார்த்தேன். ஒரு 'மனோகரா' என்கிற சிவாஜி படத்தைப் பார்த்தபோது அவருடைய முகத்தில் கலைஞரை பார்த்தேன்.

ஆனால் இன்று நான் கலைஞரைப் பார்க்கும் போது ஒரு குழந்தை உருவத்தில் பார்த்தேன். மேலும் இவரை தற்போது பார்த்ததன் மூலம் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியைப் பார்த்த சந்தோஷம் கிடைத்துவிட்டது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.