தமிழ் சினிமாவில் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் சிறு சிறு காமெடி ரோல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கொட்டாச்சி.  பின் பட வாய்ப்பு குறைந்ததால் திரை உலகை விட்டு சற்று ஒதுங்கினார். அவ்வப்போது கிடைக்கும் படங்களில் நடித்துவந்தார்.

ஆனால் இவருக்கு கிடைக்காத வரவேற்பு இவரின் மகளுக்கு கிடைத்துள்ளது. 6 வயதாவும் 'மானஸ்வி' இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 

இந்த படத்தை தொடர்ந்து, த்ரிஷாவின் மகளாக 'பரமபத விளையாட்டு' படத்திலும் அவருக்கு மகளாக வாய் பேச முடியாத, காது கேளாத குழந்தை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பல விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

இதுவரை, வாடகை வீட்டில் வசித்து வந்த கொட்டாச்சி, தற்போது சொந்த வீட்டில் குடியேறியுள்ளார்.  இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறுகையில்,  சென்னைக்கு வந்த புதிதில் 800 ரூபாய் வாடகைக்கு வாசித்தேன்.  பின் 2000 ரூபாய் வாடகை வீட்டில் இருந்தேன்.

திருமணம் ஆனதும், 7 ஆயிரம் ரூபாய் வாடகை வீட்டிற்கு குடியேறினோம். பின் ஒவ்வொரு தடவையும் வாடகை கொடுக்கும் போதும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே இருந்தது. ஆனால் அதற்கான நேரம் வரவில்லை 'மானஸ்வி' பிறந்து இரண்டு வயதில் 15000 வாடகைக்கு குடியேறினோம். 

மூன்று வயதில் அவளுக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தது. பின் கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடைய வாழ்க்கை தரமும் உயர்ந்தது. அவளுக்கு இப்போது ஆறு வயது ஆகிறது.  நாங்கள் ஆசைப்பட்ட சொந்த வீடு கனவும் நிஜமாகியுள்ளதாக கூறுகிறார் கொட்டாச்சி. 

இதற்கு முழுக்க முழுக்க காரணம், தன்னுடைய மனைவி , மகள் ஆகிய இரண்டு தேவதைகளால் மட்டுமே என்றும் அவர்களால் மட்டுமே தன்னுடைய கனவு சாத்தியமாகி உள்ளதாக கூறியுள்ளார்.  தற்போது புதிதாக வீடு வாங்கி குடியேறியுள்ள இவர்களுக்கு பலர் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.